குவாம் தீவை தாக்குவதற்கான திட்டத்தை விலாவாரியாக அறிவித்த வடகொரியா!

Friday, August 11th, 2017

அமெரிக்காவின் குவாம் தீவை தாக்குவதற்கான திட்டத்தை விலாவாரியாக வடகொரியா அறிவித்துள்ளது இந்த திட்டம் தற்போது அந்த நாட்டின் இராணுவத்தால் உருவாக்கப்பட்டுவருவதாகவும், நாட்டின் தலைவரது உத்தரவு கிடைத்ததும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜப்பானுக்கு மேலாக தரையில் இருந்து 30 கிலோமீற்றர் உயரத்தில் 4 ஏவுகணைகளைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியாவின் அரச ஊடகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவிற்கு ஆபத்தை ஏற்படுத்தினால், வடகொரியா எந்த தருணத்திலும் பதட்டத்துடனேயே இருக்க நேரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Related posts: