குவன்தனாமோ கைதிகளை குறைக்க ஒபாமா நடவடிக்கை!

Friday, January 6th, 2017

குவன்தனாமோ பே இராணுவ சிறையில் இருந்து மேலும் நான்கு கைதிகளை சவுதி அரேபியாவுக்கு இடமாற்றம் செய்வது குறித்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் குவன்தனாமோ சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதை நிராகரித்திருக்கும் நிலையில் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா அங்குள்ள கைதிகளை மேலும் குறைக்கும் கடைசி முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்படி இன்றைய தினத்திற்குள் நான்கு கைதிகள் சவூதிக்கு மாற்றப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 20 ஆம் திகதி பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் குவன்தனாமோ சிறையில் இருக்கும் 19 கைதிகளை ஓமான், இத்தாலி, ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட குறைந்தது நான்கு நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ய ஒபாமா திட்டமிட்டுள்ளார்.

ஒபாமாவின் இறுதி முயற்சி புர்த்தியடையும் பட்சத்தில் குவன்தனாமோ பே சிறையில் இருக்கும் கைதிகளில் எண்ணிக்கை 40 ஆக குறைவடையும். ஒபாமா தனது பதவிக்காலத்தில் அந்த சிறையை மூடுவதற்கு முயற்சி மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

coltkn-01-06-fr-07161504043_5120675_05012017_MSS_CMY

Related posts: