குற்றவியல் சட்டத்தினை நவீன மயப்படுத்த வேண்டும் – கியூபெக்கின் நீதி அமைச்சர்!

குற்றவியல் சட்டத்தினை நவீன மயப்படுத்த வேண்டும் என கியூபெக்கின் நீதி அமைச்சர் ஸ்டீபனி வெல்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தாமதமான நிலையினை நீக்குவதற்கும் நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் ஏனைய மாநிலங்களின் நீதி அமைச்சர்களுடன் சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும் ஸ்டீபனி வெல்லி குறிப்பிட்டுள்ளார்.
குற்றவியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் போது அவற்றின் அடிப்படையில் இருந்தே திருத்தி அமைக்க வேண்டும் என்றும் அவர் வழியுறுத்தியுள்ளார்.வழக்கு விசாரணைகளை துரிதப் படுத்துவதற்காக கியூபெக் அரசாங்கம் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
இதற்காக சுமார் 135 மில்லியன் டொலர்களை அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
குற்றவியல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில் தாமதத்தை ஏற்படுத்துவதாகவும் ஸ்டீபனி வெல்லி தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|