குடியேறிகளை பகிர்ந்து கொள்ளும் ‘கோட்டா’: ஹங்கேரி வாக்கெடுப்பு!

Sunday, October 2nd, 2016

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும், குறிப்பிட்ட அளவு குடியேறிகளை ஏற்றுக்கொள்ள வைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் குறித்து ஹங்கேரி மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கை முறைக்கும் இந்த ஒதுக்கீடு ஒரு அச்சுறுத்தல் என்று கூறி அதை நிராகரிக்குமாறு ஹங்கேரி மக்களை பிரதமர் விக்டோர் ஒர்பான் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வாக்கெடுப்பு வெளிநாட்டினர்களுக்கு எதிராக உணர்வு கொண்ட செயல் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஹங்கேரி, முள்கம்பி வேலிகளை தனது தெற்கு எல்லையில் அமைத்த ஒரு வருடத்திற்கு பிறகு இந்த வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது; அந்த எல்லைப்பகுதியூடாகச் சுமார் 4 லட்சம் குடியேறிகள் நாட்டை கடந்து மேற்கு ஐரோப்பா நோக்கி சென்றனர்.

இந்த வாக்கெடுப்பில் அதிபடியான வாக்கு வித்தியாசத்தில் ஒர்பான் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் சட்டப்படி அது செல்லுப்படியாக குறைந்தது 50 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருக்க வேண்டும்.

_91488337__91484611_6257800e-2ad4-41b4-b8d2-af40598387e9

Related posts: