குடியுரிமை பெறுவதற்கு தெரசா மே வைத்த புதிய ஆப்பு!

Tuesday, September 6th, 2016

பிரித்தானியாவில் குடியுரிமை பெறும் விவகாரம் அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளர்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பு கடந்த ஜூன் 23 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், பெரும்பாலான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

குறிப்பாக இந்த வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் இருந்து பிரித்தானியாவில் குடியேறும் மக்கள் பிரித்தானிய மக்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விவகாரங்களை பறித்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் தான் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது அவ்வளவு நல்லதல்ல, ஒன்றியிருப்பதே நல்லது என கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தான் சிறந்தது என வாக்களித்த காரணத்தினால், அவர் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

சீனாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய தெரசா மே கூறுகையில், பிரித்தானிய மக்கள் கடந்த மாதம் ஜூன் 23 ஆம் திகதி வாக்களித்ததற்கான காரணமே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவில் மக்கள் குடியேறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தான். இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பிறகு அந்நியர்கள் குடியுரிமை பெறுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட அமைப்பு உருவாக்க தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (2)


பிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரம்! - 77 பேர் பலி!!
இரண்டு நாட்களில் ‘180க்கு அதிகமான மக்கள் பலி!
2 முறை மட்டுமே பதவி - தடையை நீக்க  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தீர்மானம்!
சிரியாவில் ரஷியா குண்டு மழை - மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் கண்டனம்!
இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு!