குடியுரிமை சட்டத்தில் மாற்றம் – அவுஸ்திரேலியா பிரதமர் அதிரடி அறிவிப்பு!

Sunday, April 23rd, 2017

குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அவுஸ்திரேலியாவில் வசித்தவராக இருக்க வேண்டும் என்பதுடன் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என அவுஸ்திரேலியா பிரதமர் மால்கம் டேர்ன்புல் அறிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் வெளிநாட்டை சேர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கான 457 பணி விசா திட்டத்தை இரத்து செய்து அவுஸ்திரேலிய அரசு உத்தரவிட்டது. இதனால் அங்கு பணியாற்றும் வெளிநாட்டினர் கடுமையாக பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நல்ல ஆங்கில புலமை பெற்றவர்கள் மற்றும் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மட்டுமே அவுஸ்திரேலிய நாட்டின் குடிமகனாக முடியும் என்று பிரதமர் மால்கம் டேர்ன்புல் அதிரடியாக அறிவித்துள்ளார்.

குடியுரிமைக்கான ஆங்கில தேர்வில், பெண்கள், குழந்தைகள் மற்றும் குழந்தை திருமணம் தொடர்பான கேள்விகளும் கேட்கப்படும். இது தவிர அவுஸ்திரேலியாவை பற்றிய மதிப்பீடுகள் தொடர்பான கேள்விகளுக்கு மிக சிறந்த பதில்கள் அளித்தால் மட்டும் குடியுரிமை கிடைக்கும். புதிய விதிமுறைப்படி ஒருவர் 3 முறை மட்டும் விண்ணப்பிக்கலாம். மூன்றாவது முறையும் குடியுரிமை தொடர்பான தேர்வில் தோல்வியடைந்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: