குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து!

Wednesday, July 17th, 2019

மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்த விபத்தில் 55 பேர் உயிரோடு புதைந்தனர். இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் அந்த கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், கட்டிடம் நேற்று சரிந்து தரைமட்டமானது. கட்டிடத்தின் வீடுகளில் இருந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மீட்பு பணியின் போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் உடல்கள் எடுக்கப்பட்டதுடன் மேலும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மும்பையில் அண்மையில் பெய்த தொடர் கன மழையின் காரணமாக கேசர்பாக் கட்டிடம் உறுதி தன்மையை இழந்து இருந்து உள்ளது. இதன் காரணமாகவே அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது தெரியவந்து உள்ளது.

Related posts: