குஜராத் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – நாராயணசாமி !

Monday, August 7th, 2017

 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்துக்கு, குஜராத் முதல்வர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

‘குஜராத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியின் வாகனத்தின் மீது, பா.ஜ.க வைச் சேர்ந்தவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராகுல்காந்தி அதி உச்ச பாதுகாப்பைக் கொண்டவர். இந்த தாக்குதலில் அவருடைய பாதுகாப்பாளர்களும் காயம் அடைந்துள்ளனர். குஜராத்தில் வைத்து பா.ஜ.க.வினரால் ராகுல்காந்தி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமைக்கு, மாநில முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்காக மாநிலத்தின் முதல்வர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதே போல் தாக்குதல் நடத்திவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.‘ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: