கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா!

Saturday, October 1st, 2016

நீர் மின் உற்பத்தி திட்டம் ஒன்றின் ஒரு பகுதியாக உலகிலேயே மிக பெரிய ஆறுகளில் ஒன்றின் கிளை நதியை சீனா தடுத்து இருக்கிறது.

இந்த நதி ஓடுகின்ற இடங்களில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான மக்களின் நீர் ஆதாரத்தை இது கெடுத்துவிடும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பிரம்மபுத்திரா என்று அறியப்படும் யார்லொங் ஸாங்போ ஆற்றுக்கு நீரை வழங்குகின்ற இந்த கிளை நதியானது, நீர்தேக்கத்தை உருவாக்குவதற்காக தடுக்கப்பட்டுள்ளது.

இது நீர் பாசனத்திற்கும், வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கும், மின் உற்பத்திற்கும் உதவும் என்று சீனா கூறுகிறது.ஆனால், இந்த அணைக்கு கீழே இருக்கும் இந்திய மற்றும் வங்கதேச மக்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி இவ்விரு நாடுகளும் கவலையடைந்துள்ளன.

_91473113_011c0e06-d472-4e68-abcb-514cfd5386c4

Related posts: