கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் புகுந்த கார் – 5 பேர் பலி!

Monday, November 22nd, 2021

அமெரிக்காவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் அடுத்த மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. ஆனால், தற்போதில் இருந்த பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரம் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் வாகேஷா நகரில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆட்டம், பாட்டம், நடன நிகழ்ச்சிகளுடன் இசை கருவிகளை இசைத்தபடி வாகேஷா நகரின் முக்கிய சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து சென்றனர்.

அப்போது, சிவப்பு நிற கார் அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த சாலையில் வேகமாக வந்தது. அந்த கார் அணிவகுப்பில் சென்றுகொண்டிருந்த மக்கள் மீது அதிவேகமாக மோதியது. அணிவகுப்பு கூட்டத்திற்குள் புகுந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதி வேகமாக சாலையை கடந்து சென்றது.

கார் வேகமாக மோதியதில் அணிவகுப்ல் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்தான் விபத்தை ஏற்படுத்தினாரா? என்பது குறித்து போலீசார் எந்தவித தகவலும் வெளியிடவில்லை.

000

Related posts: