கிரைமியா  உக்ரைனிடம்  மீண்டும் ஒப்படைக்கப்படாது –  ரஷ்ய வெளியுறவு அமைச்சகம்!

Thursday, February 16th, 2017

கிரைமிய கட்டுப்பாட்டை மீண்டும் உக்ரைனிடம் ரஷ்யா ஒப்படைக்காது என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருங்கடல் குடாநாடு மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட கருத்துக்களுக்கு பதில் அளிப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சின் தகவல் அமைந்துள்ளது.

இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,  ‘எங்களுடைய சொந்த பிரதேசத்தினை நாம் மீண்டும் கொடுக்க கூடாது. கிரைமியா ரஷ்யாவைச் சேர்ந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

russian-flag4-649x330

Related posts: