கிரீஸில் கோர விபத்து – குறைந்தது 32 பேர் பலி – 85 பேர் காயம்!
Wednesday, March 1st, 2023கிரீஸில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 85க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிரீஸில் உள்ள லாரிசா நகருக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிரீஸில் நடந்த மிக மோசமான தொடருந்து விபத்து இதுவென்றும், விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவரவில்லை என்றும் தீயணைப்புப் படை தெரிவிக்கிறது.
அதிவேகமாக, எதென்ஸில் இருந்து வடக்கு நகரமான தெசலோனிகிக்கு (Thessaloniki) பயணித்த நகரங்களுக்கு இடையேயான பயணிகள் தொடருந்தும், சரக்கு தொடருந்து ஒன்றும் நேருக்கு நேர் இவ்வாறு மோதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தினால் பல தொடருந்து பெட்டிகளில் தீப்பிடித்ததில் தீக்காயமடைந்த பல பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 250 யணிகள் பேருந்துகளில் தெசலோனிகிக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்ட மீட்பாளர்கள் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|