கிரீசில் காட்டுத் தீ : உயிரிழப்பு 91 ஆக உயர்வு!

Tuesday, July 31st, 2018
Warning: mysqli_query(): (HY000/2013): Lost connection to MySQL server during query in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/wp-db.php on line 2030

கிரீசில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான, கிரீசின், ஏதென்ஸ் நகர் அருகே, அட்டிகா பிராந்தியத்தில், சமீபத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது.

காட்டுத் தீயில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதம் அடைந்தன; 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகின.இந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை, 91 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 25 பேரை காணவில்லை; அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபத்தான பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.