கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Thursday, July 21st, 2016

பிரபல இணையதளமான கூகுளில் டாப் 10 கிரிமினல்கள் பட்டியல் ஒன்றை அண்மையில் வெளியிட்டது அந்த பட்டியலில் இந்திய  பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றிருந்தது இந்த சம்பவம்  பெரும் சர்ச்சையை மத்திய அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு கூகுள் நிறுவனம் தவறு செய்ததாக கூறி  மன்னிப்பும் கேட்டது.

இதைத் தொடர்ந்து  கிரிமினல்கள் பட்டியலில் தொடர்ந்து பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து  வழக்கறிஞர் சுஷில்குமார் மிஸ்ரா, அலகாபாத் கோர்ட்டில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, கூகுள் நிறுவனம் மற்றும் அதன் சி.இ.ஓ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாகிகள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார் மேலும்  இதே விவகாரம் தொடர்பாக 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குப்தா என்பவரும் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது

Related posts: