கிம் ஜாங் – டிரம்ப் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம்!

Wednesday, March 13th, 2019

அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.