காஷ்மீர் வனப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படை என்கவுண்டர்!

Friday, June 29th, 2018

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் வனப் பகுதியில்  இந்திய பாதுகாப்பு படை இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டது.  இந்நிலையில் அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து அருகிலுள்ள முகாம்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் அங்கு உடனடியாக சென்றனர்.  அவர்கள் அந்தப் பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: