காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்; அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்!

Friday, July 22nd, 2016

காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு தற்போது சுற்றுலா செல்ல வேண்டாம் என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. கிட்டதட்ட அடுத்த 2 மாதங்களுக்கு சுற்றுலாவுக்காக செய்யப்பட்டிருந்த புக்கிங்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

கடந்த 2014-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்தே காஷ்மீர் சுற்றுலா நலிவடைந்துவிட்டது. இது அங்குள்ள டாக்ஸி ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வியாபாரிகள் மட்டுமின்றி ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் மற்றும் வன்முறை அதிகரித்து வருவதால் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தன் நாட்டு குடிமக்கள் காஷ்மீரின் பகல்காம், குல்மார்க், சோனாமார்க் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதேபோல், ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தன் நாட்டு குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts: