காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் மருந்தக உரிமையாளர் பலி!

Monday, April 17th, 2017

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மருந்தக உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த 9 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன்போது, தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்ததுடன், வாக்குச்சாவடிகளுக்கு பொதுமக்களை செல்ல விடாமல் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்களை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர்.

போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்கியதைடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த வன்முறை மற்றும் துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

பாதுகாப்பு படை தரப்பிலும் அதிகளவிலான வீரர்கள் காயமடைந்ததுடன், வன்முறை காரணமாக 7.13 சதவீத வாக்குகளே பதிவானது. இந்த நிலையில், புல்வாமா பகுதியில் மருந்துக் கடை உரிமையாளர் ஒருவரது வீட்டில் ஆயுததாரிகள் புகுந்தனர்.

இதன்போது, வீட்டில் இருந்த பஷிர் அஹமது தார் என்ற கடை உரிமையாளர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.

Related posts: