காலநிலை மாற்ற கொள்கையின் எதிர்ப்பாளர் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு தேர்வு!

Thursday, December 8th, 2016

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளுக்கு பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் எழுப்பிய ஒருவரை, நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க ஓக்லஹோமா மாநிலத்தின் முதன்மை அரச வழக்கறிஞரும், புதைபடிவ எரிபொருள் துறையின் நெருங்கிய கூட்டாளியாக பார்க்கப்படும் ஸ்காட் ப்ரூயிட், காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கையில் நம்பிக்கையற்றவர் ஆவார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் நியமனத்தை பெறப் போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ், குறைவாகப் பயன்படுத்த வேண்டிய புதைபடிவ எரிபொருளை அமெரிக்கா அதிகமாக பயன்படுத்துவதற்கே ஸ்காட் ப்ரூயிட் பணியாற்றியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு டிரம்பின் தேர்வு மிகவும் வருத்தமளிப்பதாகவும், நாட்டுக்கு ஆபத்து விளைவிப்பதாகவும் அமைந்துள்ளதாக பெர்னி சாண்டர்ஸ் விவரித்துள்ளார்._92879407_trump

Related posts: