காலக்கெடுவை நிராகரித்தது நைஜர் இராணுவம்!

பதவியிலிருந்து நீக்கப்பட்ட நைஜர் ஜனாதிபதியிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான மேற்கு ஆபிரிக்க நாடுகளின் காலக்கெடுவை நைஜரின் இராணுவதலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
மேற்கு ஆபிரிக்க தலையீட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், நைஜரின் வான்வெளி நேற்று முதல் மூடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக இராணுவ ஆட்சியாளர்களின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 26 ஆம் திகதி அன்று நைஜரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு மூன்று ஆண்டுகளில் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் ஏழாவது முறையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
ஊடகமே அமெரிக்கர்களின் எதிரி சொல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!
இத்தாலியில் கடும் பனிச்சரிவு: 100 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!
அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது ; ஜனாதிபதி மைத்திரி!
|
|