கார் மீது வாகனம் மோதியதில்  தகராறு: அமெரிக்க கால்பந்து வீரர் சுட்டுக்கொலை !

Tuesday, April 12th, 2016

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்துக்கு உட்பட்ட நியூ ஆர்லியான்ஸ் நகரைச் சேர்ந்தவர் வில் ஸ்மித் (வயது 34). பிரபல கால்பந்து வீரரான இவர், நியூ ஆர்லியான்ஸ் செயின்ட்ஸ் கால்பந்து அணியில் முன்னணி வீரராக திகழ்ந்தார்.

இந்த அணி கடந்த 2010-ம் ஆண்டு தேசிய கால்பந்து லீக்கில் சாம்பியன் பட்டத்தை பெற்றது. பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு இவர் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்தநிலையில் வில் ஸ்மித், தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். பிரெஞ்ச் குவார்ட்டர் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு வாகனம் இவரது காரில் மோதியது. இதில் வில் ஸ்மித்துக்கும், அந்த வாகன டிரைவரான கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கார்டெல் ஹெயிஸ், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வில் ஸ்மித்தை சரமாரியாக சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் வில் ஸ்மித்தின் மனைவிக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நியூ ஆர்லியான்ஸ் போலீசார், கார்டெல் ஹெயிசை கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்துக்கு கார் விபத்து தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? எனவும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts: