காப்பல் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிடம் ஐக்கிய அரபு இராச்சியம் முறையீடு!

Saturday, June 8th, 2019

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடற்பரப்பில் கடந்த மாதம் 12 ஆம் திகதி நான்கு எண்ணெய் தாங்கி கப்பல்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்க அதிகாரி ஒருவர் செயல்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றிணைக்கப்பட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் குறித்து ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிடம் முறையிட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது, சவுதி அரேபியா மற்றும் நோர்வே நாடுகளின் எண்ணெய் தாங்கிகளும் சேதமாக்கப்பட்டன.

இந்த நிலையில், குறித்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஈரான், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளது. இந்த தாக்குதல்களை அடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் எண்ணெய் படிவங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தின் கடல் மாசடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் திட்டமிடப்பட்ட அதி உயர் தொழில்நுட்பத்தைக் கொண்ட தாக்குதல் என விபரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: