காத்திருக்கிறது பரிசு: அமெரிக்காவை அச்சுறுத்தும் வட கொரியா!

Thursday, September 7th, 2017

 

அணு ஆயுத சோதனை என்பது எங்கள் நாட்டின் தற்காப்புக்காக நடத்தப்படுவது என வட கொரியா பிரதிநிதி ஹான் சே சோங் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், அமெரிக்காவுக்கு மேலும் சில பரிசுகள் காத்திருக்கின்றன.எங்கள் நாட்டின் மீது ஐநா விதித்துள்ள பொருளாதார தடையை பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை, மேலும் நாங்கள் மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனை தற்காப்புக்காக, அதனை நாங்கள் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

வட கொரியா, ஆறாவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியதை தொடர்ந்து, அமெரிக்காவும், தென் கொரியாவும், இணைந்து ஏவுகணை தடுப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

Related posts: