காணாமல் போன விமானம்: வீரரின் செல்போன் இயங்குகிறதா?

Sunday, July 31st, 2016

சென்னையிலிருந்து அந்தமானுக்கு கடந்த 22ம் திகதி புறப்பட்ட ஏஎன் 32 ரக விமான படை விமானம் மாயமானதையடுத்து தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்திய அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.

இந்நிலையில், அந்த விமானத்தில் சென்ற வீரர் ரகுவீர் வர்மா என்வரின் கைப்பேசி இயங்குவதாக அவர் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, நாங்கள் ரகுவீர் கைப்பேசிக்கு தொடர்பு கொண்ட போது முழுவதுமாக அழைப்பு சென்றது. ஆனால் மறுமுனையில் இருந்து யாரும் போனை எடுத்து பேசவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், விமானம் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகிய போதிலும் ரகுவீருக்கு அனுப்பிய செய்திகள் படிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த தகவல்கள் அனைத்தையும் விமானத்தை தேடும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் செல்போனின் செயல்பாடுகள் கவனிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: