காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் நிபுணர்கள் புதிய தகவல் வெளியீடு!

Tuesday, December 20th, 2016

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியை தலைமையேற்றுள்ள நிபுணர்கள், அந்த விமானம் விழுந்திருக்க கூடும் என்று தற்போது தேடப்படும் பகுதியில் விமானம் இருக்க சாத்தியம் இல்லை எனவும், மேலும் வடக்கு பகுதியில் தேடல் பணியை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்துள்ளனர்.

விமானம் காணாமல் போய் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தெற்கு இந்திய பெருங்கடலில் இந்த விமானம் குறித்த தடயங்கள் எதுவும் மீட்கப்படவில்லை.

கடந்த 2014 மார்ச் மாதம், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்குப் பறந்து கொண்டிருந்த போது, 239 பயணிகளுடன் இந்த போயிங் 777 வகை விமானம் காணாமல் போனது. இந்த விமானத்தை தேடும் பணி முடிவடைய உள்ள சூழலில், இந்த விமானம் குறித்த தேடல் பணி மேலும் நீட்டிக்கப்படாது என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் செஸ்டர், இந்த விமானத்தின் தேடல் பணி வரும் 2017 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தை தாண்டி செல்ல வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

_93039747_mh370

Related posts: