காணாமல் போன மலேசிய படகு: 25 சீன குடிமக்கள் உயிருடன் மீட்பு!

காணாமல் போன மலேசிய படகு இருந்த 25 சீன குடிமக்களை உயிருடன் கண்டுபிடித்துள்ளதாக மலேசியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதில் இன்னும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக மலேசியா அரசின் அமைச்சர் டடூக் பங் யூக் மிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவின் பிரபல சுற்றுலா தீவு ஒன்றுக்கு செல்லும் வழியில் போர்னியோவின் கடற்கரைக்கு அப்பால் படகு காணாமல் போனது.
மலேசியாவின் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் கடல் பகுதியில் பெரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.மீட்பு நடவடிக்கைகளுக்கு, சீரற்ற கடுமையான வானிலை பெரும் தடையாக அமைந்துள்ளன.
Related posts:
ஆயுதங்கள் வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
சவுதி பத்திரிகையாளர் கொலை: வெளிப்படையான விசாரணை வேண்டும் - ஐரோப்பிய கூட்டமைப்பு !
14ஆம் திகதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு!
|
|