காட்டுத் தீ: கலிஃபோர்னியா 1,000 வீடுகள் நாசம்!

Sunday, August 5th, 2018

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில், ரெடிங் நகரைச் சுற்றியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின.

அந்தப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். எதிர்பாராத வகையில் புதிய பகுதிகளில் தீ உருவாகி வருவதால், தீயணைப்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி, இதுவரை சுமார் 4.5 லட்சம் ஏக்கர் பரப்பளவை நாசமாக்கியுள்ள இந்தக் காட்டுத் தீயில் 7 பொதுமக்களும், 4 தீயணைப்பு வீரர்களும் பலியாகினர்.

Related posts: