காட்டுத்தீயில் சிக்கி கலிபோர்னியா உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Tuesday, November 13th, 2018

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு வேகமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயினை தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீப்பிடித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: