காசாவில் ஒரே நாளில் மூன்று கட்டிடங்கள் தரை மட்டம்; 42 பேர் பலி, பலர் காயம்!
Monday, May 17th, 2021
யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுடனான மோதல் சீற்றமடையும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் காசாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு தொடர்ச்சியாக எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
காசா நகரில் இஸ்ரேலிய படையினர் முன்னெடுத்த தாக்குதல்களில் மூன்று கட்டிடங்கள் தரை மட்டமாகியது. 42 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.
காயமடைந்த பாலஸ்தீனியர்கள் ரஃபா எல்லையைத் தாண்டி எகிப்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் வன்முறை தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் 58 சிறுவர்கள் மற்றும் 34 பெண்கள் உட்பட 192 பேர் உயிரிழந்துள்ளனர்.
யுத்த நிறுத்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுடனான மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்.
இதனால் பல்வேறு உலக நாடுகளிலும் இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலை நிறுத்துமாறு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இஸ்ரேல் விமானத் தாக்குதல் மூலம் ஹமாஸின் உளவுதுறை செயற்படுவதாக தெரிவித்து சர்வதேச ஊடக நிறுவனங்களின் தலைமையிடம் மற்றும் அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுனங்களின் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts: