கஷ்மீர் எல்லையில் பதட்டம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர பாதுகாப்பு ஆலோசனை!  

Thursday, September 29th, 2016

காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போதும் இந்தியா தரப்பில் உறுதியான ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த சம்பவத்திலும் பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டது.

இதனால் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தற்போது முனைப்பு காட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நேபாள நாட்டின் தலைமையின் கீழ் நடக்கவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக 2 தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்தியாவின் இந்த முடிவுக்கு தற்போது வலு சேர்ந்து உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பூடான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகியவையும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தன.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்த நாடுகளும் தெரிவித்து உள்ளன. இதனால் சார்க் மாநாட்டை புறக்கணிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.

இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் முற்றுகிறது. மேலும் பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் அளித்த தொலைக்காட்சி பேட்டி யில் எந்த நாடும் எங்கள் மீது போரை திணித்தால் அந்த நாட்டை நாங்கள் அழிப் போம். தேவைப்பட்டால் அணுகுண்டை பயன்படுத்தி இந்தியாவை அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்ர்

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் படைகள் அத்துமீறலில் ஈடுபட்டு துப்பாக்கியால் சுட்டது. நேற்று முதல் அவ்வப்போது இந்த தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 2 நாட்களாக நடக்கும் இந்த தாக்குதலால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் படைகள் நடத் திய தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் மத்திய மந்திரிசபையின் பாதுகாப்பு விவகார கமிட்டி கூட்டத்தை கூட்டினார். இதில் பாகிஸ்தான் படை கள் துப்பாக்கி சூடு மற்றும் எல்லைப் பகுதி நிலவரம் குறித்தும் தகுந்த பதிலடி கொடுப்பது பற்றியும் ஆலோ சிக்கப்பட்டது.

nawaz copy

Related posts: