கவுதம் கம்பீருக்கு பிடியாணை!
Thursday, December 20th, 2018இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ருத்ராபில்ட்வெல் ரியாலிட்டி நிறுவனத்தின் வர்த்தக தூதராக கம்பீர் செயல்பட்டு வருகிறார்.
இதன் இயக்குனர்களான முகேஷ் குராணா, கவுதம் மேத்தா ஆகியோர் முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாகவும், குறித்த நேரத்தில் வீடுகளை கட்டித்தரவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கம்பீருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது, அவர் தூதுவர் மட்டுமே என கம்பீர் தரப்பு வக்கீல்கள் விளக்கம் அளித்தனர்.
Related posts:
சிரியாவில் நிரந்தர இராணுவ முகாம் அமைக்கிறது ரஷ்யா!
அமெரிக்க அதிகாரிகளை வெளியேறுமாறு ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு!
பணிப்புரைகளை ஏற்கப்போவதில்லை - கட்டலோனிய தெரிவிப்பு !
|
|