கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட 43 தொழிலாளிகள்: நைஜீரியாவில் கொடூரம்!

நைஜீரியாவில் வடகிழக்கு பிரதேசம் ஒன்றில் 43 வயல்களில் பணிபுரியும் தொழிலாளிகள் கழுத்தறுக்கப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கடும் விசனம் வெளியிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி, “பைத்தியம்” மிக்க தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது என்றும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் நெல் வயல்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களை கொலை செய்துள்ளனர்.
போகோ ஹராம் மற்றும் ஐஎஸ்ஐஎஸின் மேற்கு ஆபிரிக்க தீவிரவாதக் குழுக்கள் தீவிரமாக செயல்படும் ஒரு பிராந்தியத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இண்மையில், இந்த பிரதேசத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது;.
இந்த முட்டாள்தனமான கொலைகளால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பிரதேசத்தில் இருந்து 15 பெண்கள் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
|
|