கலிபோர்னியா தீவிபத்தில் 70,000 ஏக்கர் நிலம் தீயில் கருகி நாசம்: 9 பேர் பலி!
Monday, November 12th, 2018கலிபோர்னியா மாகாணத்தில் கேம்ப் ஃபயரால் ஏற்பட்ட தீ விபத்து பெரும் காட்டுத்தீயாக மாறியுள்ளது.
கேம்ப் ஃபயர்தான் இந்தத் தீ விபத்துக்கு காரணம் என கலிபோர்னியா தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் 24,000 மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக கலிபோர்னியா தீயணைப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், “கேம்ப் ஃபயர் மூலம்தான் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்று பலமாக வீசியதன் காரணமாக இந்தப்பகுதி முழுவதும் தீ பரவ ஆரம்பித்துள்ளது. இதில் சுமார் 70,000 ஏக்கர் நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது. வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. துணிகளில் எரிந்து அதில் இருந்து வெளியாகும் புகை அதிகமாக உள்ளது. புகைமூட்டத்தால் இரவுகளில் மீட்புப்பணிகளில் ஈடுபடுவது சிரமமாக உள்ளது. தீ வேகமாகத் தேசிய நெடுஞ்சாலைகளில் பரவியது. கலிபோர்னியாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலை அது. வாகனத்தில் நான்கு பேர் சடலமாகவும், வாகனத்துக்கு அருகில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். வீடுகளிலிருந்து சிலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். வீடுகள், மருத்துவமனைகள், கேஸ் நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் தீயில் கருகி சாம்பலாகின” என்றனர்.
Related posts:
|
|