கலிபோர்னியாவில் காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்!

Friday, June 24th, 2016

மத்திய கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான மக்களை வீடுகளில் இருந்து வெளியேறப்பட்டள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

லேக் இசபெல்லா என்ற மலை நகரத்தில் இருந்த 50 முதல் 60 கட்டிடங்கள் அழிந்துள்ளன என்றும் அந்த தீ பெரிய அளவில் பரவியதால், ஆயிரக்கணக்காண வீடுகள் ஆபத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் தாங்கள் தீயை கட்டுப்படுத்துவதில் முன்னேறிச் செல்வதாக தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மேற்கு அமெரிக்காவில் சூடான மற்றும் வறண்ட வானிலை தான் இது போன்ற தீ பரவிய பல சம்பவங்களைத் தூண்டியது என்று கூறப்படுகிறது.

Related posts: