கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கைது!

Monday, March 26th, 2018

கற்றலோனியா நாட்டின் முன்னாள் தலைவர் கார்ல்ஸ் பியூட்டிக்மன்ற் (Carles Puigdemont) ஜேர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்என செய்திகள் வெளியாகியுள்ளன.

பெல்ஜியத்திற்கு செல்லும் வழியில் டென்மார்க் நாட்டின் எல்லையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இவர் ஸ்பெயின் அரசாங்கத்தால் ராஜதுரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என தேடப்பட்டு வந்தவர். இவர் கைது செய்யப்பட்டுள்ளதால் கற்றலோனியாவில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: