கற்குவாரியில் விபத்து: அறுவர் உயிரிழப்பு!

Monday, May 29th, 2017

தெற்கு ஆந்திர பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கற்குவாரி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்கடந்த சனியன்று இடம்பெற்ற இவ் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவரை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குண்டூர் மாவட்ட ஆட்சியர் கோனா சசிதர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் அனைவரும் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள சட்டவிரோத கற்குவாரிகள் அனைத்தும் மூடப்படும் எனத் தெரிவித்த குண்டூர் மாவட்ட ஆட்சியர், விபத்திற்கு காரணமானர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம் மாநில ஆளுநர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வாறான சம்பங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி நிறுவனமொன்றின் அறிக்கையின் பிரகாரம், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை இவ்வாறான 135 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 37 பேர் உயிரிழந்துள்ளதோடு, 141 பேர் படுகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: