கறுப்பினர் நபர் கொல்லப்பட்ட விவகாரம்: அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள்!

அமெரிக்காவின் லூஸியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் நகரத்தில் அமைந்துள்ள ஒரு உள்ளூர் சிறு கடையின் வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியுள்ளனர்.
இந்தக் கடையின் வெளிப்பறத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அல்டான் ஸ்டிர்லிங் என்ற கறுப்பின நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆர்ப்பாட்டக்கார்கள் கோஷமிட்டபடியும், பதாகைகளை அசைத்தபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, போலீசார் அமைதியாகவே இருந்தனர்.
இரண்டு வெள்ளை இன போலீசார், ஸ்டெர்லிங்கை பிடித்து கீழே உட்கார வைத்து, பின்னர் மிகக் குறைந்தளவு இடைவெளியில் சுடும் காட்சியுள்ள இரண்டாவது வீடியோ வெளியான பிறகு, இது குறித்து போராட்டங்கள் தொடர்கின்றன.
அல்டான் ஸ்டெர்லிங்கின் குடும்பத்தினர், அவரது உயிரிழப்புக்கு காரணமாக அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளனர்.
ஒரு கடையின் வெளிப்பறத்தில் குறுவட்டுகளை (சிடி), 37 வயதான ஸ்டெர்லிங் விற்று வந்துள்ளார். துப்பாக்கி சூட்டினால் தனது மார்பிலும், முதுகிலும் ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்துள்ளதாக ஒரு பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
Related posts:
|
|