கர்நாடகாவின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு ஆய்வு – நஸ்ட ஈடு வழங்கவும் நடவடிக்கை!

Saturday, October 7th, 2023

கர்நாடகாவின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு ஆய்வு நடத்தி வருகின்றது.

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 236 வட்டங்களில் 195 வட்டங்கள் வறட்சியினால்; பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதிகளை மத்திய அரசு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும எனவும் இதற்காக‌ மத்திய நிபுணர் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்து கர்நாடக முதல்வர் சித்தராமையர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு கர்நாடகாவின் வறட்சி நிலையை ஆய்வு செய்ய மத்திய விவசாயத்துறை இணைச் செயலாளர் அஜித்குமார் சாஹூ தலைமையில் மத்திய நீர்வளத்துறை நிபுணர் டி.ராஜசேகர், மத்திய நீர் ஆணையத் தலைவர் அசோக் குமார் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய நிபுணர் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: