கரூரில் அதிகளவு பண விநியோகம் : சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு ! -தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அங்கு மே 23ம் திகதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமியும், அதிமுக சார்பில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு பெருமளவு பணத்தை வாரி வழங்கியதாக எழுந்த புகாரையடுத்தே தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் வந்துள்ளன.
இதனால் அத்தொகுதியில் மே 16ம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் மே 23ம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற பணப்பட்டுவாடா புகாரால் ஒரு தொகுதியில் சட்டசபை தேர்தலையே ஒத்திவைப்பது என்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|