கருங்கடலில் எரிவாயு குழாய்களை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

கருங்கடலில் துருக்கியின் எரிவாயு குழாய் கட்டுமான பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசி வாயிலான உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த உரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் போது குறித்த குழாய் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் நிறைவு செய்தாக வேண்டும் எனவும் இரண்டாவது குழாய் கட்டுமான பணிகள் 2019 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்தாக வேண்டும் எனவும் புடின் தெரிவித்துள்ளார்
முதலாவது குழாய் அமைப்பின் மூலம் தெற்கு ரஷ்யாவிலிருந்து துருக்கிக்கு மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் இரண்டாவது குழாய் அமைப்பின் மூலம் ரஷ்யாவிலுள்ள எரிவாயு கருங்கடல் ஊடாக கொண்டு வரப்பட்டு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் இந்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த குழாய் அமைக்கும் திட்டத்தை முழுமையாக செய்து முடிப்பதற்கு சுமார் 12 தொடக்கம் 13 அமெரிக்க பில்லியன்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|