கப்பல் மூழ்கி விபத்து: கொலம்பியாவில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

Monday, June 26th, 2017

கொலம்பியாவின் வடமேற்கு நீர்த்தேக்கம் ஒன்றில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதைத் தொடர்ந்து ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த விபத்து இன்று திங்கட்கிழமை ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பயணிகள் கப்பலில் இருந்த 170 பேரில் 133 பேர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மீட்பு நடவடிக்கையின் பொருட்டு சிறிய படகுகள் மற்றும் இராணுவ ஹெலிகொப்டர்கள் என்பன பயன்படுத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காணாமல் போனதாக கருதப்படுவோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: