கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் மாயம்!

Monday, February 5th, 2018

மேற்கு ஆபிரிக்கப் பகுதியில் உள்ள கயானா வளைகுடா கடலில் பயணித்த கப்பல் ஒன்று 22 இந்திய மாலுமிகளுடன் காணாமல் போயுள்ளது.

குறித்த கப்பலில் 8.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான எரிபொருள் சேமித்துவைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த மூன்று நாட்களாக அந்த கப்பலில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Related posts: