கனேடிய விமானம் விபத்து- 7 பேர் பலி!!

Wednesday, March 30th, 2016

கனடாவில் உள்ள கியூபெக் தீவில் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கனடாவில் கிழக்கு கியூபெக் நகருக்கு சென்ற தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக மகட்லாண்ட் தீவில் தரையிறங்கிய போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது

இந்த விமான விபத்தில் கனடா முன்னாள் மந்திரி ஜீன் லாப்பியரி உட்பட 7 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தனியார் விமான விபத்து குறித்து ஆய்வு செய்ய கனடா விமான போக்குவரத்து துறை மகட்லாண்ட் தீவிற்கு விரைந்துள்ளது

Related posts: