கனடாவில் பழங்குடியினர் தொடர் தற்கொலை: அவரச நிலை பிரகடனம்!

Tuesday, April 12th, 2016
கடனாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்ததையடுத்து, அப்பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கிரீ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இராண்டாயிரம் பேர் மட்டுமே இருக்கின்ற நிலையில், அவர்களில் பலர் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கின்றனர் என ஒன்டோரியாவில் உள்ள பர்ஸ்ட் நேஷன் ஆஃப் அட்டவாப்பியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த சமூகத்தைச் சேர்ந்த அனைத்து வயதுடைய நூற்றுக்கும் அதிகமானவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இந்த தற்கொலை முயற்சியில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கனடா பழங்குடி இனத்தவர் இடையே பெரிய அளவில் வறுமையும் போதைப் பொருள் பயன்பாடும் காணப்படுகிறது.

Related posts: