கனடாவில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக 54 பேர் பலி!

Saturday, July 7th, 2018

கனடாவில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக குறைந்தது 54 பேர் வரையில் மரணமடைந்துள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் இந்த வெப்பநிலையால் கடும் பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் காட்டுத்தீ பரவல் ஏற்பட்டு வருகின்ற நிலையில், பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அதிக வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள கனேடிய அரசாங்கம் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை மீளும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related posts: