கனடாவில் துப்பாக்கிச் சூடு : 4 பேர் பலி !

வட அமெரிக்க நாடான கனடாவின் கிழக்கு பகுதியில் உள்ள பிரெட்ரிக்சன் நகரில், நேற்று காலை அடுத்தடுத்து துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டன. இதனால், மக்கள் பீதியடைந்தனர்.
அங்கு வந்த போலீசார், ‘வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம்’ என, உத்தரவிட்டனர். இதையடுத்து, வீட்டுக்குள்ளேயே மக்கள் .இதன்பின், போலீசார் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரெட்ரிக்சன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் இறந்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளோம்’ என, கூறப்பட்டது. ஆனால், துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
Related posts:
பாராளுமன்றத்தை கைப்பற்ற சதாமின் மகள் களத்தில்!
பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகள் நிறுத்தம்!
தகுதியற்றவர் டிரம்ப் - எப்.பி.ஐ.குற்றச்சாட்டு!
|
|