கத்திக்குத்து தாக்குதல் – ஜப்பானில் இருவர் உயிரிழப்பு!

Tuesday, May 28th, 2019

ஜப்பானின் கவாசாகி பகுதியில் உள்ள பூங்காவில் மர்ம நபர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் பெண் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குறித்த கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: