கதாநாயகர்களின் கல்லறையில் மார்க்கோஸ் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!
Wednesday, August 10th, 2016மக்களால் வெறுக்கப்பட்ட அதிபர் என்று கருதப்படும் பெர்டினான்ட் மார்க்கோஸின் உடலை மணிலாவிலுள்ள கதாநாயகர்களின் கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதித்துள்ள தீர்மானத்திற்கு எதிராக பிலிப்பைன்ஸில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
தன்னுடைய ஆட்சிக்கு எதிராக கேள்வி கேட்க துணிந்தவரை சித்ரவதைக்கு, சிறைத் தண்டனைக்கு, கொல்லுவதற்கு ஆணையிட்ட ஒரு சர்வாதிகாரி மற்றும் கொள்ளைக்காரர் என்று இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பல குழுக்களின் கூட்டணியானது மார்கோஸை விமர்சித்திருக்கிறது.
குறித்த சர்ச்சைக்குரிய உடல் அடக்கமானது தற்போதைய அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோவால் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. டுடெர்டோவின் தந்தை பெர்டினான்ட் மார்க்கோஸின் அரசில் பணிபுரிந்தவர். 1986 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி உருவானபோது அவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
Related posts:
வழி நெடுக இரத்தம்! ஜெயலலிதா மரணம் தொடர்பில் தொடரும் அப்போலோ மர்மங்கள்
ரஷ்ய எரிவாயுக் குழாய்களின் வெடிப்புகளுக்கு நாசவேலையே காரணம் - பிரித்தானியா காரணம் என ரஷ்யா குற்றச்சா...
தாய்வானில் கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை தீ விபத்து - 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100 க்கும்...
|
|