கட்டுப்பாட்டை இழந்த வானூர்தி நொறுங்கிய வீழ்ந்தது!

5a09133fbf15d-IBCTAMIL Tuesday, November 14th, 2017

ஈராக்கில் ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ17 ரக  இராணுவ ஹெலிகாப்டர்  ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது,  திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட் மாகாணத்தின்  அருகே பறந்தபோது ஹெலிகொப்டர் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில், ஹெலிகொப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகள் மற்றும் ஐந்து  இராணுவ அதிகாரிகள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர் என ஈராக்  இராணுவம் தெரிவித்துள்ளது.