கட்டுப்பாடுகளுடன் சபரிமலை தரிசனத்திற்கு அனுமதி!

கொரோனா தொற்று பரவலை அடுத்து கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐய்யப்பன் கோவில் திறக்கப்படவுள்ளது.
அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகைத்தரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பரிசோதனை சான்றிதழ்களையும் உடன் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குபின் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சபரிமலையில் ஒரு நிபந்தனையோடு பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி சம்பந்தப்பட்ட நபர் தனக்கு கொரோனா இல்லை. என்பதை உறுதி செய்யும் பரிசோதனை மேற்கொண்டு அந்த சான்றோடு வந்தால் நிச்சயம் அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|